சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தெலங்கானா விபத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு: பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் நேற்றிரவு மேலும் 4 பேர் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 மே 2022, 6:17 am

DIN

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் நேற்றிரவு மேலும் 4 பேர் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மேலும் 16 பேர் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யெல்லாரெட்டி மண்டல் ஹசன்பள்ளி கேட் அருகே 25 பேர் பயணித்த டாடா ஏஸ் வாகனம், எதிரே வந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் டிராலி ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


இதனிடையே, சாலை விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் சுட்டிரையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரண தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.