சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரூபாயின் மதிப்பு சரிவு: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? - மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :9 மே 2022, 8:10 am

DIN

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. கடந்த மே 5 ஆம் தேதி ஒரு டாலர் மதிப்பு ரூ. 76.90 ஆக இருந்த நிலையில் இன்று(திங்கள்) காலை வர்த்தகத்தில் ரூ. 77.42 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்தத்தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், 'டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 

பிரதமர் மோடி இப்போது முதல்வராக இருந்திருந்தால், மத்திய அரசை தேச விரோத அரசு என்று கடுமையாக சாடியிருப்பார்.

பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.