ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மம்தாவுக்கு இலக்கிய விருது: மூத்த எழுத்தாளர் விருதை திருப்பியளித்தார்

கொல்கத்தா: வங்காளத்தின் முதல்வர் மாதாவுக்கு இலக்கிய விருது. இதைக் கண்டித்து முன்னாள் விருது பெற்ற எழுத்தாளர் தனது விருதை திருப்பி அளித்துள்ளார்.

News image
விருதை திருப்பியளித்த எழுத்தாளர் ரஷித் பானர்ஜீ
Updated On :11 மே 2022, 7:24 am

DIN

கல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு வழங்கிய இலக்கிய விருதைக் கண்டித்து மூத்த எழுத்தாளர் தனது விருதைத் திருப்பி அளித்துள்ளார்.

2020இல் மம்தா பானர்ஜி தனது புத்தகமான  'கபிதா பிதன்' நூலை வெளியிட்டார். அந்த கவிதை தொகுப்பிற்கு தற்போது வங்க அகாதெமி விருது வழங்கியது.

இதைக் கண்டித்து தனது விருதைத் திருப்பியளித்த எழுத்தாளர் ரஷித் பானர்ஜீ கூறியதாவது: “இந்த விருதை முதல்வர் வாங்கியது எழுத்தாளராக எனக்கு அவமானமாக இருக்கிறது. அகாதெமியின் ஓய்வில்லாத இலக்கிய உழைப்புக்கு என்ற வார்த்தை முற்றிலும் பொய்யானது. மம்தாவின் அரசியலை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தோம். ஆனால் அதற்காக அவருக்கு  விருது வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது” 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.