தாஜ்மஹால் மீதான பொதுநல வழக்கு தள்ளுபடி

தாஜ்மஹால்
தாஜ்மஹால்
Published on
Updated on
1 min read

அலகாபாத்:  தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது அலகாபாத் உயர்நீதி மன்றம். 

பொது நல வழக்கு (Public interest litigation) இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 32ன் படி, பொதுமக்களின் நலத்தை பாதிக்கும் விடயம் குறித்து, பாதிக்கப்பட்டவரோ அல்லது வேறு ஒரு தனி நபரோ அல்லது தொண்டு நிறுவனமோ மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தை குறிக்கும். சில நேரங்களில் பொதுமக்கள் உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்பும் ஆவணங்களின் அடிப்படையில், உயர்நீதிமன்றமே தன்னிச்சையாக பொதுநல வழக்கு தொடர்ந்து பொதுநலத்தை காக்க இயலும்.

நிறைய வலதுசாரி அமைப்புகள் தாஜ்மஹாலை தாஜ்மஹால் அல்ல தேஜோ மஹாலயா ( சிவனின் கோவில்) இந்துக் கோவில் என்பர். 

22 அறைகளுக்கு பின்னால் உள்ள உண்மையை கண்டறிய வேண்டும் என்று அலகாபாத் பெஞ்சில், அயோத்யா பாஜாகவின் ஊடகப் பொறுப்பாளரான ரஜ்னீஷ் சிங் பொது நல வழக்கு தொடுத்தார் கடந்த வாரம்.

"இந்த தகவலைக் கேட்க நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பாதுகாப்பு காரணங்கள் என்று சொல்வது உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் போய் வரலாறு படியுங்கள். ஆராய்ச்சி செய்யுங்கள். நாளைக்கு எங்களது அறைகளைக் கூட பார்க்க வேண்டுமென கேட்பீர்கள் போல. தயவு செய்து பொது நல வழக்கை அவமானப்படுத்தாதீர்கள்" என்றுக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர்நீதி மன்றம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com