மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்படும் காண்டாமிருகத்தின் கொம்புகள்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் கொம்புகள் வேட்டைக் காரர்களால் மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்படுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
rhino
rhino

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் கொம்புகள் வேட்டைக் காரர்களால் மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்படுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

அஸ்ஸாமின் ஒராங் தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் கொம்பு வேட்டைக்கார்களால் மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 9 ஆம் தேதி ஒராங் தேசிய பூங்காவில் முவமாரி பகுதியில் காண்டாமிருகம் ஒன்று கொம்பு இல்லாமல் இருந்ததை பூங்காவில் உள்ள அதிகாரிகள் கவனித்துள்ளனர். இதனையடுத்து, வனத்துறை மருத்துவர்கள் பூங்காவிற்கு வந்து காண்டாமிருகத்தினை பரிசோதித்தனர். காண்டாமிருகத்தினை பரிசோதித்த வனத்துறை மருத்துவர் மற்றும் அந்த பூங்காவின் தலைமைக் காவலர் இருவரும் வேட்டைக் காரர்கள் துப்பாக்கியின் மூலம் மயக்க மருந்து செலுத்தி கொம்பினை வெட்டி எடுத்திருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால், குண்டு பாய்ந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் அந்த காண்டாமிருகத்தின் மீது தென்படவில்லை. முதலில் இதனை வனவிலங்குகளுக்குள் ஏற்பட்ட சண்டையினால் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்த வனத்துறை மருத்துவர் பின்னர் கொம்பு வெட்டி அகற்றப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.

வனத்துறை மருத்துவரின் சிகிச்சைக்கு பின்னர் காண்டாமிருகத்தின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால், இது போன்ற சம்பவங்கள் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அதே போல இந்த வேட்டையில் கால்நடை மருத்துவம் படித்தவர்கள் சம்பந்தபட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். மயக்க மருந்து சதாரண நபர்களுக்கு கிடைப்பது கடினம். அப்படி கிடைத்தாலும் அதனை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து சாதாரண மனிதர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com