தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதற்கட்டமாக 27 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். 70-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். 12 பேர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன பலரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தீ விபத்து சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் வருத்தம் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இன்று காலை மேலும் 3 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தில்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 27 போ் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?

'திருச்சி குலுங்கட்டும்' - மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

