ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

குட்பை அண்ட் குட்லக்...கட்சியிலிருந்து விலகிய காங்கிரஸ் மூத்த தலைவர்...காரணம் இதுதானாம்...

கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். 

News image

சுனில் ஜாக்கர்

Updated On :14 மே 2022, 7:54 am

DIN

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர்  சுனில் ஜாக்கர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். 

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னியை அக்கட்சியை சேர்ந்த மற்றொரு மூத்த தலைவரான சுனில் ஜாக்கர் கடுமையாக விமரிசித்து பேசியிருந்தார். 

இதையடுத்து, கட்சியை மீறி செயல்பட்டதாகக் கூறி விளக்கம் கேட்டு ஜாக்கருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில்,  கட்சியிலிருந்து அவர் விலகியுள்ளார். பேஸ்புக் நேரலையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தலைவர்களை சாடிய அவர், "குட்பை அண்ட் குட்லக், காங்கிரஸ்" என பேசியுள்ளார்.

பாஜகவை எதிர்ப்பதற்காக கட்சியை ஒருங்கிணைக்கும் நோக்கில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் மாநாடு நடத்திவரும் நிலையில், ஜாக்கர் கட்சியிலிருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.