அஸ்ஸாமில் வெள்ளம் : 25,000 பேர் பாதிப்பு 3 பேர் இறப்பு

குவஹாத்தி: அஸ்ஸாமில் இந்த வருடத்தின் முதன் வெள்ளத்தால் ஆறு  மாவட்டங்களில் 2500 பேர் பாதிப்பு, 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அஸ்ஸாமில் வெள்ளம் : 25,000 பேர் பாதிப்பு 3 பேர் இறப்பு

குவஹாத்தி: அஸ்ஸாமில் இந்த வருடத்தின் முதன் வெள்ளத்தால் ஆறு  மாவட்டங்களில் 2500 பேர் பாதிப்பு, 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திமா ஹாசோ மாவட்டத்தில் மண் சரிவினால் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்டை மாநிலமான மேகாலயா, அருணாச்சல பிரதேசத்திலும் சில நாள்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கோபில் ஆற்றில் கொள்ளலவு அபாயகரத்தை தாண்டியுள்ளது. அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்ததாவது: மே 14 வரை,6 மாவட்டம் 94 கிராமம் 24,681 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1732.71 ஹெக்டர் பயிர் நிலங்கள் மூழ்கியுள்ளன. ராணுவம், துணைப்படை ராணுவம், தீயணைப்பு துறையினர் இணைந்து சஹார் மாவட்டத்தில் 2,150 மக்களை மீட்டுள்ளனர். 

நாகோன் மாவட்டம் லஹிம்புரில் பல்வேறு அணைகள், சாலைகள், பாசன கால்வாய்கள் பாதிப்படைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com