ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லியில் இதுவரை 96 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு

தில்லியில் இன்று வரை கிட்டத்தட்ட 100 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளதாக மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 மே 2022, 11:13 am

DIN

தில்லியில் இன்று வரை கிட்டத்தட்ட 100 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளதாக மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநகராட்சி இதுதொடா்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை, நகரில் 81 டெங்கு பாதிப்புகள் பதிவு 
செய்யப்பட்டுள்ளன.மே 14ஆம் தேதி வரை 96 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.

நீரின் மூலம் பரவும் இந்த நோயினால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

நிகழாண்டில் தில்லியில் ஜனவரியில் 23 பேரும், பிப்ரவரியில் 16 பேரும், மாா்ச்சில் 22 பேரும், ஏப்ரலில் 20 பேரும், மே மாதத்தில் இதுவரை ஒருவரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஜனவரி 1 முதல் மே 17 வரையிலான காலகட்டத்தில் கடந்த 2021-இல் 21 பாதிப்புகளும், 2020-இல் 18 பாதிப்புகளும், 2019-இல் 10 பாதிப்புகளும், 2018-இல் 12 பாதிப்புகளும் 2017 இல் 18 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நோய் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பா் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பா் மத்திவரை நீடிக்கலாம்.

கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.

தில்லியில் 2019-ல் டெங்குவால் 2 போ், 2018-ல் நான்கு போ், 2017-ல் 10 போ் உயிரிழந்துள்ளனா்.

தில்லியில் 2016-ல் 4,431, 2017-ல் 4,726, 2018-ல் 2,798, 2019-ல் 2,036, 2020-ல் 1,072 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

தில்லியில் இந்தாண்டு இதுவரை 16 மலேரியா மற்றும் 8 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், தில்லி ஒரு பெரும் அளவிலான டெங்கு பாதிப்பை கண்டது. அக்டோபா் மாதத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 10,600ஐத் தாண்டியது. 1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.