ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘ஆம் ஆத்மியை நினைத்து நாடு பெருமை கொள்கிறது’: கேஜரிவால்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செயலால், ஆம் ஆத்மியை நினைத்து நாடு பெருமை கொள்வதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 மே 2022, 10:51 am

DIN

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செயலால், ஆம் ஆத்மியை நினைத்து நாடு பெருமை கொள்வதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சுகாதார அமைச்சராக இருந்த விஜய் சிங்லா, அரசு ஒப்பந்த பணிகளுக்கு ஒரு சதவிகிதம் கமிஷன் தருவதாக அரசு அதிகாரிகளிடம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கான ஆதாரம் கிடைத்ததை தொடர்ந்து, அமைச்சர் பதவியிலிருந்து இன்று காலை அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும், வழக்குப் பதிவு செய்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேஜரிவால் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “பகவந்தை நினைத்து பெருமைக் கொள்கிறேன். உங்களது நடவடிக்கையை பார்த்து என் கண்களில் நீர் வந்துவிட்டது. ஒட்டுமொத்த நாடும் ஆம் ஆத்மியை நினைத்து பெருமைக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று கடந்த மார்ச் மாதம் ஒரு பெண் உள்பட 10 போ் அமைச்சா்களாக பதவியேற்றனர். இதில் 8 போ் முதல் முறை எம்எல்ஏக்களாவா்.  117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.