வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

டிரோன் தொழில்நுட்பம் விவசாயிகளின் வாழ்க்கையை நவீனமயமாக்குகிறது: பிரதமர் மோடி

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ ஐ தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

News image
Updated On :27 மே 2022, 11:02 am

புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ ஐ தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அவர் வேளாண் ட்ரோன் விமானிகளுடன் உரையாடினார். திறந்தவெளி  ட்ரோன் செயல் விளக்கங்களை கண்டார் மற்றும் ட்ரோன் கண்காட்சி மையத்தில் உள்ள தொழில்முனைவோர்களுடன் உரையாடினார்.

ட்ரோன் துறையில் தனக்கு உள்ள ஈர்ப்பு மற்றும் ஆர்வம் குறித்து பேசிய பிரதமர், ட்ரோன் கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர்களின் உற்சாகம் மற்றும் இத்துறையில் உள்ள கண்டுபிடிப்புகளால் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். 

மீன்பிடி தொழில் போன்ற துறைகளில் ட்ரோன்கள் சிறப்பான பலனை தரும். வயல்களில் பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பணிகளை ட்ரோன்கள் மிகவும் எளிமையாக செய்கின்றன என்று குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், சுற்றுலா, திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.

டிரோன் தொழில்நுட்பம் விவசாயிகளை மேம்படுத்துவதிலும் அவர்களின் வாழ்க்கையை நவீனமயமாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.