ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 9ஆம் தேதி ராஞ்சியிலிருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோருக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி குழந்தை மற்றும் அவர்களது பெற்றோருக்கு விமானத்தில் அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் சேவை குறைபாடு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்தின் பொது இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | விஜய் ‘பீஸ்ட்’ போஸ்டரில் பட்லர்
மேலும், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் அதிமுக, பாமக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

வாகன சோதனையில் ரூ. 65,200 பறிமுதல்

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


