எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் இது: சிபிஐ முன் ஆஜரான கார்த்தி சிதம்பரம்

சீனர்களுக்கு விசா வழங்கியதில் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் பதிவான வழக்கில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிபிஐ விசாரணைக்கு இன்று (சனிக்கிழமை) ஆஜராகியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 மே 2022, 5:37 am

DIN


சீனர்களுக்கு விசா வழங்கியதில் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் பதிவான வழக்கில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிபிஐ விசாரணைக்கு இன்று (சனிக்கிழமை) ஆஜராகியுள்ளார்.

இந்தியாவில் பணியாற்ற சீனர்களுக்கு விதிமுறைகள் மீறி விசா வழங்க கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனைக் கைது செய்தது. மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

தில்லியில், கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சிபிஐ முன் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் முறையே 9 மற்றும் 8 மணி நேரம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது நாளாக கார்த்தி சிதம்பரம் இன்று (சனிக்கிழமை) ஆஜராகியுள்ளார். அப்போது பேசிய அவர், "டெஸ்ட் ஆட்டம் 5 நாள்களுக்கு நடைபெறும். இது 3-வது நாள்தான். நான் மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரது பதிலுக்காகக் காத்திருக்கிறேன்" என்றார்.

முன்னதாக, தனது வீட்டில் சிபிஐ சோதனையின்போது நாடாளுமன்ற நிலைக் குழு தொடர்பான ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.