கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது!

இந்திய விவசாயத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழும் தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் மே 29-ஆம் தேதி தொடங்கியதாக என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது!

இந்திய விவசாயத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழும் தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் மே 29-ஆம் தேதி தொடங்கியதாக என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக் காலம் தொடங்குகிறது. அதாவது மே 23 ஆம் தேதியே மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், வானிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பருவ மழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் தென்படாததால் மே 30 ஆம் தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தென்மேற்குப் பருவழை இன்று ஞாயிற்றுக்கிழமை(மே.29) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, 3 நாள்கள் முன்னதாகவே மழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் வரும் 1 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழை தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தென்மேற்குப் பருவமழையால் பயனடைகின்றன. இந்தப் பருவமழை குறைந்தால் நாட்டில் விவசாயமும் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com