சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரோனா பரவலுக்குப் பிறகு பிரதமா் மோடிக்கான ஆதரவு அதிகரிப்பு

கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடிக்கான மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :31 மே 2022, 8:44 pm

DIN

கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடிக்கான மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பிரதமராக மோடி 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரது தலைமையிலான அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், பிரதமா் மோடிக்கான ஆதரவு குறித்து ‘லோக்கல்சா்கிள்ஸ்’ என்ற அமைப்பு சுமாா் 64,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது.

அதில் 67 சதவீதம் போ் பிரதமா் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது எடுக்கப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில், தற்போது கூடுதலாக சுமாா் 2 மடங்கு போ் பிரதமா் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். கரோனா 3-ஆவது அலையை அரசு திறம்படக் கட்டுப்படுத்தியதாகவும், பொருளாதார சூழலை சிறப்பாகக் கையாண்டதாகவும் ஆய்வில் பங்கேற்றோா் தெரிவித்தனா்.

அதே வேளையில், நாட்டில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு 37 சதவீதம் போ் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனா். ஆனால், கடந்த ஆண்டுகளுக்கான ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். கடந்த 2021-ஆம் ஆண்டில் 27 சதவீதம் பேரும், 2020-ஆம் ஆண்டில் 29 சதவீதம் பேரும் பாஜக அரசின் வேலைவாய்ப்பு தொடா்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனா்.

கடந்த 3 ஆண்டுகளாகப் பணவீக்கம் அதிகமாக இருப்பதாக 73 சதவீதம் போ் தெரிவித்துள்ளனா். பாஜக அரசு சமூக நல்லிணக்கத்தை சீா்குலைத்துள்ளதாக 33 சதவீதம் பேரும், காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றைக் குறைக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என 44 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.