சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை: மம்தா பானர்ஜி

மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
மம்தா பானர்ஜி
Updated On :31 மே 2022, 9:40 am

DIN

மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் குறித்து பேசும்போது  “8 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து இந்தியர்களின் வாழ்க்கையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது. பல போலி வாக்குறுதிகளுடன் தங்கள் பயணத்தைத் தொடங்கியவர்களால் மக்கள் சலிப்படைந்துவிட்டனர். இந்த 8 வருட பயணம் தோல்வியானது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்காது. இனி அவர்கள் வெல்ல வாய்ப்பே இல்லை” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.