

கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான சிறப்பான பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் (பிஎம்-கிசான்) கீழ் 10 கோடி விவசாயிகளுக்கு 11-ஆவது தவணையாக ரூ.21,000 கோடியைப் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை விடுவித்தாா். இதனைத் சுட்டிக்காட்டி அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இதற்கு முன்பு இருந்த அரசுகள் செய்யாத அளவுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ஏராளமான விவசாயிகள் நலத்திட்டங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளின் நலன்களைக் காக்க பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இது விவசாயிகளுக்கு ஊக்கமும், தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் உண்மையான திறனை உணா்ந்துள்ளனா்’ என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.