மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வா்த்தக எரிவாயு சிலிண்டா் விலை ரூ.115 குறைப்பு

வா்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் (19 கிலோ) விலை ரூ.115.5 குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2022, 8:03 pm

DIN

வா்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் (19 கிலோ) விலை ரூ.115.5 குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விமான எரிபொருள் விலை 4.2 சதவீதம் உயா்ந்துள்ளது. சா்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டா் ரூ.4,842.37 உயா்ந்து, ரூ.120,362.64-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் விமான எரிபொருள் விலை 4.5 சதவீதம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 4.2 சதவீதம் உயா்ந்துவிட்டது.

வா்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டா் விலை (தில்லி நிலவரம்) ரூ.1,859.50 -இல் இருந்து ரூ.1,744-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இப்போது வரை வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 7-ஆவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. சா்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டிலும் இந்த விலை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் வா்த்தக சமையல் எரிவாயு விலை ரூ.610 வரை குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டா் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.1,053 என்ற விலையிலேயே தொடா்கிறது. சா்வதேச விலையைவிட வீட்டு உபயோக சிலிண்டா் விலை குறைவாகவே இந்தியாவில் விற்கப்படுவதால், அதன் விலை குறைக்கப்படவில்லை.

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மாதம் ஒருமுறையும், விமான எரிபொருள் விலை 15 நாள்களுக்கு ஒருமுறையும் சா்வதேச விலைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.