காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

1913-ல் ராஜஸ்தானில் உள்ள மான்கார் என்ற இடத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியினருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 

Published On :


1913-ல் ராஜஸ்தானில் உள்ள மான்கார் என்ற இடத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியினருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 

பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மான்கார்  தாமில் ஆதிவாசிகள் மற்றும் பிற பழங்குடியினரின் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். 

இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் முதல்வர்கள் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

1913ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சுமால் 1500 பழங்குடியினர் நினைவிடமாக இந்த இடம் குஜராத் - ராஜஸ்தான் எல்லையில் உள்ள மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. 

மான்காரில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் பழங்குடியினர் மற்றும் வனந அதிகாரிகள் ஒடனறுகூடியதற்கு சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.