தொங்கு பாலம் விபத்தையடுத்து குஜராத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் கடந்த அக். 30 (ஞாயிற்றுக்கிழமை) மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 135-ஆக ஆனது.
மேலும் தற்போது 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் காணாமல் போன 2 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மோர்பி தொங்கு பாலம் விபத்தையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும் இன்று அரசு சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யபட்டுள்ளது.
முன்னதாக, விபத்து நடந்த மோர்பி பகுதியை நேற்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் காயமடைந்து மோர்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சரிந்து மீளும் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் சரிவு!

வாரத்தின் முதல் நாளில்.. தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர்! யார் இந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ்?

ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

