மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பள்ளியை கேளிக்கை விடுதியாக மாற்றிய ஆசிரியர்: விடியோவால் சிக்கினார்

மது விருந்து அளித்து கேளிக்கை விடுதியாக மாற்றிவைத்திருந்த ஆசிரியர் குறித்த தகவல் விடியோ மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News image

பள்ளியை கேளிக்கை விடுதியாக மாற்றிய ஆசிரியர்: விடியோவால் சிக்கினார்

Updated On :2 நவம்பர் 2022, 12:04 pm

ஷிவ்புரி: மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஒன்றில் அவ்வப்போது மது விருந்து அளித்து கேளிக்கை விடுதியாக மாற்றிவைத்திருந்த ஆசிரியர் குறித்த தகவல் விடியோ மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பள்ளியில் மது மற்றும் அசைவ உணவுகளை வழங்கி மிகப்பெரிய அளவில் விருந்து கொடுத்த சம்பவம், கிராம மக்கள் எடுத்த விடியோ மூலம் அதிகாரிகளுக்குத் தெரிய வந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போடா கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிக் கட்டடத்தில் விருந்து கொடுத்த விடியோ கடந்த திங்கள்கிழமை சமூக வலைத்தளத்தில் பரவியது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இந்த விருந்து எப்போது அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.

இந்த ஆசிரியர், பள்ளியில் அவ்வப்போது மதுவிருந்து கொடுப்பது வழக்கம் என்றும் தட்டிக்கேட்கும் பொதுமக்களை அவர் மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.

இந்த விடியோவை எடுக்கும் கிராம மக்களையும் அந்த ஆசிரியர் மிரட்டி விரட்டி விடுவதும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.