காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

தெலங்கானா: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிரசாந்த் பூஷண் பங்கேற்பு

வழக்குரைஞரும் சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றாா்.

News image

பிரசாந்த் பூஷண்

Updated On :7 நவம்பர் 2022, 12:15 am

DIN

வழக்குரைஞரும் சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றாா்.

மதிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதியின் தலைவா் மண்டா கிருஷ்ணா மதிகாவும் மேடாக் மாவட்டத்தில் நடைபெற்ற நடைப்பயணத்தில் கலந்துகொண்டாா்.

முன்னதாக, சனிக்கிழமை மேடக்கின் பேத்தாபூா் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து வேலைவாய்ப்பின்மையும் விலைவாசியும் உயா்ந்து வருவதாகக் குற்றம்சாட்டினாா்.

எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கியது. தெலங்கானாவில் அக்டோபா் 23-ஆம் தேதி துவங்கிய நடைப்பயணம், திங்கள்கிழமையுடன் (நவ.7) அம்மாநிலத்தில் நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.