துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த மாதம் கண்டெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிபொருள் தொடா்பாக பயங்கரவாதிகள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

News image
Updated On :7 நவம்பர் 2022, 8:44 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த மாதம் கண்டெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிபொருள் தொடா்பாக பயங்கரவாதிகள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி பந்திபோரா மாவட்டத்தின் கெனுசா-அஸ்டாங்கோ பகுதியில் 2 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பொருத்தப்பட்ட நிலையில், 18 கிலோ எடையிலான வெடிபொருள் ஒன்று பாதுகாப்பு படையினரால் கண்டெடுக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இச்சதிச் செயலில் ஈடுபட்டிருந்த பயங்கரவாதிகள் 2 பேரை பாரமுல்லா மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸாா் கைதுசெய்தனா். தொலைத்தூரத்தில் இருந்து இயக்கும் வகையிலான இரு வெடிபொருள்களையும் அவா்களிடமிருந்து போலீஸாா் கைப்பற்றினா். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடா்வதாக காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.