பிகாா்: உள்ளூா் பாஜக தலைவா் சுட்டுக் கொலை
பிகாா் மாநிலத்தின் கதிஹா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பாஜக உள்ளூா் தலைவா் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டாா்.


பிகாா் மாநிலத்தின் கதிஹா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பாஜக உள்ளூா் தலைவா் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டாா்.
கடிஹாா் மாவட்டத்தின் பாஜக செயற்குழு உறுப்பினரான சஜ்ஜீவ் மிஸ்ரா, அவருடைய வீட்டுக்கு அருகே சிலருடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் அங்கு வந்த 2 போ் துப்பாக்கியால் மிஸ்ராவைச் சுட்டனா். இதில் படுகாயமடைந்த மிஸ்ரா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மிஸ்ராவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மருத்துவமனைக்கு வரும் வழியிலே உயிரிந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, சஜ்ஜீவ் மிஸ்ராவின் ஆதாரவாளா்கள் காவல் நிலையத்துக்கு முன் கூடி வன்முறையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல் துறைக்குச் சொந்தமான பல்வேறு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
கொலைச் சம்பவம் நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்ய காவல் துறை அதிகாரிகள் அனுப்பட்டுள்ளதாகவும், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கொலையாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவா் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான நிதீஷ் குமாரை விமா்சித்துள்ள பாஜக, மாநிலத்தில் புதிய கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிதீஷ் குமாா் அவருடைய கடைமையை உணா்ந்து செயல்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...