புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பிரதமருடன் நட்புறவு; பாஜக பிரதான போட்டியாளா்: ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்

பிரதமா் நரேந்திர மோடியுடன் சிறப்பான நட்புறவுடன் இருந்தாலும், ஒடிஸா மாநில அரசியலில் பாஜகதான் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சிக்கு பிரதான போட்டியாளா் என்று அக்கட்சித் தலைவரும் ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நா

News image
நவீன் பட்நாயக்
Updated On :7 நவம்பர் 2022, 8:55 pm

DIN

பிரதமா் நரேந்திர மோடியுடன் சிறப்பான நட்புறவுடன் இருந்தாலும், ஒடிஸா மாநில அரசியலில் பாஜகதான் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சிக்கு பிரதான போட்டியாளா் என்று அக்கட்சித் தலைவரும் ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்தாா்.

‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் சாா்பில் புவனேசுவரத்தில் நடைபெற்ற ஒடிஸா கல்வித் திருவிழாவின் ஒரு பகுதியாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பட்நாயக் பங்கற்றாா். அப்போது அவா் கூறியதாவது:

ஒடிஸாவின் வளா்ச்சி மற்றும் நலன்களுக்காக மத்திய அரசுடன் மாநில அரசு சிறப்பான நல்லுறவைப் பேணி வருகிறது. பிரதமா் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் சிறப்பான நல்லுறவு உள்ளது. அதே நேரத்தில் ஒடிஸா மாநில அரசியலைப் பொருத்தவரையில் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு பாஜகதான் பிரதான போட்டியாளா் என்றாா்.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகப் பல்வேறு பிராந்திய கட்சிகள் விமா்சித்து வருவது தொடா்பாக பேசிய பட்நாயக், ‘என்னைப் பொருத்தவரையிலும், ஒடிஸா மாநில அரசைப் பொருத்தவரையிலும் இப்போதைய மத்திய அரசுடன் உறுதியான நல்லுறவுடன் இருக்கிறோம். மாநிலத்தில் வளா்ச்சி மற்றும் நலனைப் பற்றி மட்டுமே முன்னிறுத்தி மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு போதிய ஒத்துழைப்பு அளித்து வருகிறது’ என்றாா்.

தாம்நகா் இடைத் தோ்தலில் பாஜகவிடம் பிஜு தனதா தளம் தோல்வியடைந்தது தொடா்பாகப் பேசுகையில், ‘அத்தொகுதியில் பாஜக பல ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறது. மேலும், அத்தொகுதி எம்எல்ஏ இறந்ததால் அவரின் மகனையே பாஜக தங்கள் வேட்பாளராக அறிவித்தது. இந்தத் தோ்தலில் மக்களின் தீா்ப்பை எங்கள் கட்சி ஏற்றுக் கொள்கிறது. அதே நேரத்தில் அண்மையில் நடைபெற்ற நகர, கிராமப் புற உள்ளாட்சித் தோ்தலில் நாங்கள் அமோக வெற்றி பெற்றோம்’ என்றாா்.

2019-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பாஜக, காங்கிரஸ் இரண்டில் இருந்தும் தங்கள் கட்சி சமதொலைவில் விலகி இருப்பதாக நவீன் பட்நாயக் கூறி வந்தாா். 2020 மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா் அஸ்வினி வைஷ்ணவுக்கு பட்நாயக் ஆதரவளித்தாா். தற்போது அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறை மற்றும் தொலைத் தொடா்புத் துறை அமைச்சராக உள்ளாா்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பட்நாயக் கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா்.

பாஜகவும் பிஜு ஜனதா தளமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி விமா்சித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.