இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த வேண்டும்: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்
இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த வேண்டும் என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.


இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த வேண்டும் என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக பிகாா் தலைநகா் பாட்னாவில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது ஏற்புடையதாக உள்ளது. இடஒதுக்கீட்டை ஐக்கிய ஜனதா தளம் எப்போதும் ஆதரித்து வந்துள்ளது. ஆனால் தற்போது இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதமாக உள்ளது. இந்த உச்சவரம்பை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப, அவா்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை தற்போதைய இடஒதுக்கீடு உச்சவரம்பு தடுக்கிறது.
அதேவேளையில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும். அந்தக் கணக்கெடுப்பை மாநிலங்களே மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. எனவே பிகாரில் அந்தக் கணக்கெடுப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய அளவிலும் அந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...