உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் சந்திரசூட்: பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பணிக்காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தனஞ்சய் ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற டாக்டர் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எனது வாழ்த்துகள்.
அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன் என்றார்.
சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் சுட்டுரையில் நீதிபதி சந்திரசூட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சந்திர சூட்டுக்கு நல்வாழ்த்துகள். நீதியை விரைவாக வழங்குவதை உறுதிசெய்ய மிகவும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்ற எதிர்நோக்குகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...