ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது அவசியம்: புதிய உத்தரவு
ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது அவசியம்: புதிய உத்தரவு

ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: புதிய உத்தரவு

ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Published on


புது தில்லி: ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அதனை பதிவு செய்த நாளிலிருந்து சரியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அடையாள சான்றிதழ்களை அளித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் மோசடிகள் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆதார் அட்டை பெறும்போது அளித்த அடையாள சான்றிதழ்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளித்து புதுப்பித்துக் கொள்வதன் மூலம், ஆதார் அட்டையின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அதனை பதிவு செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, பயனாளர்கள் தங்களது அடையாள சான்றிதழ், முகவரிச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து, ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

எனவே, ஆதார் அட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், மாறும் தகவல்களும் புதுப்பிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை விவரங்களை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான வசதியை யுஐடிஏஐ மேற்கொண்டுள்ளது.

இந்த வசதி, மை ஆதார் இணையதளம், மை ஆதார் செயலி மூலமாக பயனாளர்களே செய்து கொள்ளலாம் என்றும், ஆதார் சேவை மையங்களில் நேரடியாகச் சென்றும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அவர்களது பெயரில் இருக்கும் பிழைகள், புகைப்படங்களை பதிவேற்றுதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட விவரங்களை செய்து கொள்ளலாம்.

இந்த நாள் வரை, 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com