இமாசலில் பிரசாரம் இன்றுடன் ஓய்வு: காங்கிரஸின் திட்டம் என்ன?

இமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுவதையடுத்து, காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இமாசலில் பிரசாரம் இன்றுடன் ஓய்வு: காங்கிரஸின் திட்டம் என்ன?
இமாசலில் பிரசாரம் இன்றுடன் ஓய்வு: காங்கிரஸின் திட்டம் என்ன?
Updated on
1 min read

சிம்லா: இமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுவதையடுத்து, காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இமாசலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது காங்கிரஸ். அதேவேளையில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, வீடு வீடாகச் சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபடவிருக்கிறார்.

நாட்டின் மிகப் பழமையான கட்சியான காங்கிரஸ், இமாசல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இன்று ஒரே நேரத்தில் 68 தொகுதிகளிலும் பொதுக்கூட்டத்தை நடத்தவும், அதில், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

68 தொகுதிகளைக் கொண்ட இமாசல் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன. 

முதியோருக்கான பழைய ஓய்வுதியத் திட்டத்தினை திரும்பக் கொண்டு வருவது, 300 யூனிட் இலவச மின்சாரம், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்காக ரூ.680 கோடி மற்றும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்குவது போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com