ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மகாராஷ்டிரம்: கலாம்நூரி கலாசார விழாவில் டிரம் வாசித்து ராகுல்காந்தி அசத்தல்

மகாராஷ்டிரத்தில் தனது நடைப்பணத்தின்போது ராகுல்காந்தி கலாம்நூரி கலாசார விழாவில் டிரம் வாசித்து அசத்தினார்.

News image
Updated On :14 நவம்பர் 2022, 4:16 am

DIN

மகாராஷ்டிரத்தில் தனது நடைப்பணத்தின்போது ராகுல்காந்தி கலாம்நூரி கலாசார விழாவில் டிரம் வாசித்து அசத்தினார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா்.

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தொடங்கிய நடைப்பயணம் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவை கடந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைபெற்று வருகின்றது.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் நேற்று 66ஆவது நாளை எட்டியது. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் அவர், 5 மாவட்டங்களில் உள்ள 15 சட்டப்பேரவை மற்றும் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் 382 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் ராகுல்காந்தி நேற்று தனது நடைப்பணத்தின்போது ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கலாம்நூரியில் நடைபெற்ற கலாசார விழாவில் இளைஞர்களுடன் இணைந்து டிரம் வாசித்து அசத்தினார். இது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.