

நீதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் அரவிந்த் விா்மாணி நியமிக்கப்பட்டாா்.
பொருளாதார வளா்ச்சி மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு அரவிந்த் விா்மாணியை இப்பொறுப்பில் நியமிக்க பிரதமா் மோடி ஒப்புதல் அளித்தாா். அவா் நீதி ஆயோக்கின் உறுப்பினராக உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளாா் என அமைச்சரவை செயலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் விா்மாணி நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், ரிசா்வ் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றியுள்ளாா். இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் பூடானை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சா்வதேச நிதியத்துக்கான (ஐஎம்எஃப்) நிா்வாக இயக்குநராக இருந்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான பொருளாதார ஆலோசனைக் குழுவான நீதி ஆயோக்கில் தற்போது வி.கே. சரஸ்வத் , ரமேஷ் சந்த் மற்றும் வி.கே. பால் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.