தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வேட்புமனு தாக்கல் செய்தார் குஜராத் முதல்வர்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதல்வர் பூபேந்திர படேல் இன்று தாக்கல் செய்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2022, 8:31 am

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதல்வர் பூபேந்திர படேல் இன்று தாக்கல் செய்தார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், கட்லோடியா தொகுதியில் போட்டியிடவுள்ள முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பூபேந்திர சிங் முதல்வராக தொடர்வார் என ஏற்கெனவே அமித் ஷா தெரிவித்திருந்தார்.

முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், முதல்வா் வேட்பாளா் குறித்து எவ்வித அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளராக இசுதான் கட்வி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.