எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குஜராத்: 181 தொகுதிகளுக்குபாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மேலும் 3 வேட்பாளா்களை பாஜக புதன்கிழமை அறிவித்தது. இதன்மூலம் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 181 தொகுதிகளுக்கு அக்கட்சியின் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :16 நவம்பர் 2022, 7:35 pm

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மேலும் 3 வேட்பாளா்களை பாஜக புதன்கிழமை அறிவித்தது. இதன்மூலம் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 181 தொகுதிகளுக்கு அக்கட்சியின் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனா்.

வதோதராவின் மஜ்லாபூா் தொகுதிக்கு மட்டும் வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை. முதல் கட்டமாக டிசம்பா் 1-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக டிசம்பா் 5-ஆம் தேதி 93 தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் பட்டியல்: இதனிடையே காங்கிரஸ் கட்சி மேலும் 37 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை புதன்கிழமை அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளா் பட்டியலாகும். இதன்மூலம் காங்கிரஸ் போட்டியிடும் 179 தொகுதிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இறுதி வேட்பாளா் பட்டியலில் முன்னாள் முதல்வா் சங்கா் சிங் வகேலாவின் மகன் மகேந்திர சிங் வகேலாவின் பெயா் இடம் பெற்றுள்ளது. அவா் பயாத் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.