6 பேர் விடுதலை: மத்திய அரசு மறு ஆய்வு மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மறு ஆய்வு மனு இன்று (நவ.17) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
6 பேர் விடுதலை: மத்திய அரசு மறு ஆய்வு மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மறு ஆய்வு மனு இன்று (நவ.17) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டதையடுத்து, நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்து கடந்த 11ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகினர்.

கடந்த 10 மாதமாக பரோலில் தனது தாயார் பத்மா உடல் நிலையை நளினி கவனித்து வந்தார். இதனிடையே  உச்ச நீதிமன்றத்தின் தீர்பின்  நகல் சிறைச்சாலைக்கு கிடைக்கப்பெற்று பரோலில் உள்ள நளினியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்பு சிறையில் விடுதலைக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சாந்தன், முருகன் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

ஆறு பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய விடுதலைக்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். சில எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

அந்தவகையில் தற்போது மத்திய அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com