உ..பி.யில் மண் மேடு சரிந்து விழுந்து இரண்டு பெண்கள் பலி!
உத்தரப் பிரதேசத்தின், சேலம்பூர் கிராமத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.


உத்தரப் பிரதேசத்தின், சேலம்பூர் கிராமத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
புதன்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றதாகக் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா தெரிவித்தார்.
பெண்கள் நால்வரும் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அருகிலிருந்த மண்மேடு திடீரென அவர்கள் மீது சரிந்து விழுந்தது. அருகிலுள்ளவர்கள் அவர்களைக் காப்பாற்ற அவர்களை வெளியே இழுப்பதற்குள் பூனம்(27) பிரவேஷ் (24) ஆகிய இரு பெண்களும் இறந்துவிட்டனர்.
உயிரிழந்தவர்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...