
மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இன்றைய பயணத்தின் நிறைவாக ஷெகான் பகுதியிலுள்ள கோயிலில் வெள்ளிக்கிழமை இன்று (நவ.18) சாமி தரிசனம் செய்தார்.
பாலாப்பூர் பகுதியில் இன்று காலை தொடங்கிய நடைப்பயணம் ஷெகான் வழியாக நடைபெற்றது.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை குறிவைத்து, பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இன்று (நவ.18) காலை நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது.
நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, கலந்துகொண்டார். நடைப்பயணத்தின் முடிவாக ஷெகான் பகுதியிலுள்ள கஜானன் மகாராஜா கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பரவப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.