ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறையால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்களை நவம்பர் 19ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19 - 25 வரை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதையும் படிக்க.. உனக்கு செட்டே ஆக மாட்டேன்: தடாலடித்த லேடி சூப்பர் ஸ்டார்!
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்ராவில் உள்ள தாஜ் மகால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இதர நினைவுச் சின்னங்களையும் நவம்பர் 19ஆம் தேதி கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
ஆனால், தாஜ் மகால் வளாகத்துக்குள் நுழைவதற்கான கட்டணம் மட்டும்தான் இலவசம். அதேவேளையில், தாஜ் மகாலின் நடுவில் இருக்கும் முக்கிய பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு சில நூறுகள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதால், நாளை இப்பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பவர்களும், சுற்றுலா செல்பவர்களுக்கும் இது நிச்சயம் ஒரு ஜாக்பாட்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!
10 கோடி பார்வைகளைக் கடந்த முட்ட கலக்கி!

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


