எச்சரிக்கை... இந்தியாவில் குழந்தைகளை தாக்கும் உயர் ரத்த அழுத்த நோய் நகர்ப்புறங்களில் அதிகம்! 

இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் இதய நோய் தாக்குகிறது. இதன் தாக்கம் கிராமங்களை விட நகர் புறங்களில் அதிகரித்துள்ளது.
எச்சரிக்கை... இந்தியாவில் குழந்தைகளை தாக்கும் உயர் ரத்த அழுத்த நோய் நகர்ப்புறங்களில் அதிகம்! 

இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் இதய நோய் தாக்குகிறது. இதன் தாக்கம் கிராமங்களை விட நகர் புறங்களில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்கனவே மிகப்பெரிய பிரச்னையாக உள்ள நிலையில், சமீபத்தில் இந்திய தேசிய சுகாதார இணையம் ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. 

அதில் நாட்டில் உள்ள 30 சதவீதம் பெரியவர்கள் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35 சதவீதம் பேர் நகர்புறங்களிலும், 28 பேர் கிராமப்புறங்களிலும் உள்ளனர். 10 முதல் 12 வயதுடையவர்களில் 35 சதவீதம் பேரும் மற்றும் 13 முதல் 19 வயதுடையவர்களில் 25 பேர் பேர் முதல்நிலை அல்லது இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை குழந்தைகளை விட வசதி படைத்த குழந்தைகளைதான் அதிகம் தாக்கியுள்ளது.

சில முந்தைய ஆய்வுகளை விட இந்த ஆய்வில் உடல் பருமனின் விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ள இளைஞர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன், உயர் ரத்த குளுக்கோஸ் அளவுகள் அல்லது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் கொழுப்பு அசாதாரணங்கள் போன்ற பிற சிவிடி ஆபத்து காரணிகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த தரவில் மோசமான ஊட்டச்சத்து அல்லது போதுமான உடல் செயல்பாடுகளின் நேரடி விளைவுகளை பிரதிபலிக்கலாம். மேலும் உடல் செயல்பாடு நடவடிக்கைகள் இந்த ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்படவில்லை. இருப்பினும், உயர் ரத்த அழுத்தம் இந்திய இளைஞர்களுக்கு தற்போதைய யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உருவாகின்றன. பொதுவாக உயர் ரத்த அழுத்த நோய் வசதி படைத்த செல்வ செழிப்பு மிக்கவர்களுக்கு அதிகளவில் உள்ளது. அதே நேரத்தில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அவை பாதிப்பதில்லை. இதன் தாக்கம் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரே அளவில் உள்ளது.

இந்த உயர் ரத்த அழுத்தம் ஊட்டச்சத்து குறைந்த அல்லது வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை அதிக அளவில் தாக்கியுள்ளது. 

இந்திய இளைஞர்களின் உயர் ரத்த அழுத்தம் இந்த ஆய்வில் முன்னர் அறிவிக்கப்பட்டதை விட கணிசமாக அதிகரித்துள்ளது.  

இந்திய இளைஞர்களில், தோராயமாக 2 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை புவியியல் மாறுபாடு, பாதகமான சமூகப் பொருளாதார சூழ்நிலைகளின் கீழ்நிலை விளைவுகளும் முக்கியமான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  

வட இந்திய மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. 

இது கிராம பகுதிகளை விட நகர் பகுதியில் அதிகளவில் உள்ளது. இதற்கு உடல் உழைப்பே காரணம் என்று
கூறப்படுகிறது. மேலும் உணவு பழக்க வழக்கமும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

நகர்புறங்களில் பலதரப்பட்ட உணவு வகைகள் மற்றும் நொறுக்கு தீனி வகைகளை குழந்தைகள் சாப்பிடுகின்றனர். அவை அதிக அளவு உப்பு மற்றும் சர்க்கரை சுவை கொண்டவை.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய 29 மாநிலங்களில் இந்த உயர் ரத்த அழுத்த நோய் அதிக அளவில் உள்ளது. இங்கு வாழும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை இந்த நோய் தாக்கியிருப்பதாக பகுப்பாய்வு காட்டுகிறது.

இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது ஆய்வு முறைகளால் ஓரளவு விளக்கப்படலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com