தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கிராம மக்களிடம் அடி வாங்கிய பாஜக எம்.எல்.ஏ.! சட்டையைக் கிழித்த இளைஞர்கள்!!

கர்நாடகத்தில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணைப் பார்க்க வந்த பாஜக எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கிழிந்த சட்டையுடன் பாஜக எம்.எல்.ஏ., எம்.பி. குமாரசாமி
Updated On :21 நவம்பர் 2022, 12:28 pm

DIN

கர்நாடகத்தில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணைப் பார்க்க வந்த பாஜக எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

யானை தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தினர். 

கர்நாடக மாநிலம் சிங்மங்களூரு மாவட்டத்தின் முடிகிரே தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. குமாரசாமி.

சிங்மங்களூரு மாவட்டத்தின் ஹுல்லிமானே கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யானை தாக்குதல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், எம்.எல்.ஏ.விடமும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டதாக கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது. 

இதனிடையே உயிரிழந்தப் பெண்ணின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்ற நிலையில், அதனைக் காண்பதற்காக அத்தொகுதியின் எம்.எல்.ஏ. குமாரசாமி, அப்பகுதிக்கு வந்துள்ளார். 

அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ. மீது கட்டை உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இளைஞர்கள் சிலர் குமாரசாமியின் சட்டையைக் கிழித்து அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், கிராம மக்களிடமிருந்து எம்.எல்.ஏ.வை மீட்டு காரில் அழைத்துச்சென்றனர். 

அப்பகுதியில் பாஜக எம்.எல்.ஏ.  கிழிந்த சட்டையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது பலரால் விமர்சனத்திற்குள்ளக்கப்பட்டு வருகிறது. சிலர் கிராம மக்களுக்கு எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.