தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜம்மு காஷ்மீரில் முதல் குறும்படத் திருவிழா! 

ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் முதன் முறையாக குறும்படத் திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. 

News image
Updated On :22 நவம்பர் 2022, 10:47 am

DIN

ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் முதன் முறையாக குறும்படத் திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. 

எல்லைப் பாதுகாப்பு பணியில் மட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர் மக்களின்  சினிமாவில் உள்ள திறமையை வெளிக்கொணர்ரும் நோக்கில் இந்த குறும் படத் திருவிழாவை நடத்த உள்ளது. இதற்கு ‘தில் மாங்கோ மோர்’ என பெயரிட்டுள்ளனர். 

இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல் பலி அவர்களின் யோசனையின் பேரில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘தில் மாங்கோ மோர்’  திட்டம். 

5 -15 நிமிடம் உள்ள குறும்படங்களை ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் ஆன்லைனில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் சம்ர்பிக்க வேண்டும். இந்த திருவிழாவின் கடைசி நாளில் பாலிவுட்டின் பிரபலங்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள். 

முதல் பரிசு- 1 லட்சம். 2வது பரிசு- 75 ஆயிரம். 3வது பரிசு- 50 ஆயிரம். மேலும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். விருது பெற்ற இயக்குநர் இம்தியாஸ் அலி, ராகுல் மித்ரா, ஒம்ஷ் சுக்லா ஆகியோரின் கீழ் வழிகாட்டுதல் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில்தான் ஜம்முவில் முதல் மல்டிபிளக்ஸ் சினிமா திரையரங்குகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.