திகார் சிறையில் தில்லி அமைச்சருக்கு மசாஜ் செய்தவர் யார் தெரியுமா? - அதிர்ச்சித் தகவல்!

திகார் சிறையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பிஸியோதெரபிஸ்ட் அல்ல என்றும் அவர் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
திகார் சிறையில் தில்லி அமைச்சருக்கு மசாஜ் செய்தவர் யார் தெரியுமா? - அதிர்ச்சித் தகவல்!

திகார் சிறையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பிஸியோதெரபிஸ்ட் அல்ல என்றும் அவர் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். 

இந்த நிலையில், திகாா் சிறையில் உள்ள அவா், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களைப் படிப்பதும், அவரது கால்களை ஒருவா் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதாகவும் இந்த சிசிடிவி காட்சிகள் செப்டம்பா் 13 மற்றும் 21 என பல்வேறு தேதிகளில் பதிவானதும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து பாஜக கடுமையான கேள்விகளை முன்வைத்து வருகிறது. ஆனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி சத்யேந்தர் ஜெயின் பிஸியோதெரபி சிகிச்சை எடுத்துவருவதாக ஆம் ஆத்மி பதில் தெரிவித்தது. மேலும், இந்த விடியோக்களை வெளியிட்டு பாஜக அரசியல் செய்வதாகவும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியிருந்தார். 

இந்நிலையில், திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் உடல் சிகிச்சை நிபுணர்(பிஸியோதெரபிஸ்ட்) என்று கூறப்பட்ட நிலையில் அவர் பாலியல் குற்றவாளி என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மசாஜ் செய்தவர் பெயர் ரிங்கு, ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் இவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் 376, 506 & 509 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

முன்னதாக, தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செய்யப்பட்டது பிஸியோதெரபி இல்லை என்றும் இது பிஸியோதெரபி சிகிச்சை என்று கூறிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்திய பிஸியோதெரபிஸ்ட் சங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com