பிரதமர் நரேந்திர மோடியின் நியமனங்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் அரசியலைமைப்பை கிழிப்பதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவசரகதியாக தேர்தல் ஆணையரை நியமித்ததற்கு மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் காங்கிரஸ் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில் அவசரம் ஏன்?
இது குறித்து அனைத்திந்திய காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் பவன் கீரா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இது ஒன்றும் புதிதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து நியமனங்களும், நியமன முடிவுகளும் அரசியலமைப்பை கிழிக்கும் விதமாகவே உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
அருண் கோயல் அவசரகதியாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க: ஒற்றைப் பெயர் கொண்டவர்கள் இனி இந்த நாட்டுக்குப் போக முடியாதாம்
இது குறித்து நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு கூறியதாவது: இது எந்த வகையிலான மதிப்பீடு? நாங்கள் அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு தகுதியானவரா என்பது குறித்து கேட்கவில்லை. அருண் கோயல் எந்த செயல்முறையில் குறுகிய இடைவெளியில் தேர்தல் ஆணையராக எப்படி நியமிக்கப்பட்டார் என்பது குறித்தே கேட்கிறோம் என்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இன்று அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

ஜனநாயகம் தடுமாறும்போது...

தொடங்கியது தேர்தல் திருவிழா !

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

