சபரிமலைக்குப் போறீங்களா? அப்போ இதையெல்லாம் தெரிந்துகொள்ளலாமே!

கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலைக்குப் போறீங்களா? அப்போ இதையெல்லாம் தெரிந்துகொள்ளலாமே!
சபரிமலைக்குப் போறீங்களா? அப்போ இதையெல்லாம் தெரிந்துகொள்ளலாமே!

கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, இதுவரை 29 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபரிமலையில் நடை திறந்த முதல் 6 நாள்களில் மட்டும் 2.61 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருந்ததாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நாள்தோறும் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று கூட்டம் அலைமோதிய நிலையில், 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கார்த்திகை மாதத் தொடக்கம் என்பதாலும், அடுத்தடுத்த நாள்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளான நவம்பர் 17ஆம் தேதி 47,947 பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்திருந்தனர். முதல் 6 நாள்களில் 2,61,874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும், கார்த்திகை மாத இறுதி வரை பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், அடுத்தடுத்த நாள்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரிசன நேரம் மாற்றம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிகழாண்டு மண்டலம்-மகரவிளக்கு பூஜையின்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தரிசன நேரங்களை கோயில் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.

ஐயப்பன் கோயிலில் ஏற்கெனவே தரிசன நேரங்கள் அதிகாலை 3 மணி முதல் பகல் 1 மணி வரை என்றும் மாலை 4 மணியில் இருந்து நள்ளிரவு வரை என்றும் இருந்தன. ஆனால் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைக் கருதி மாலை 4 மணிக்குப் பதிலாக மாலை 3 மணி முதலே தரிசனம் தொடங்கும் என்று ஐயப்பன் கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறப்பு ரயில்
சபரிமலை பக்தா்கள் வசதிக்காக ஹைதராபாத் முதல் கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியே டிச.5 முதல் ஜன.9 வரை இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஹைதராபாத் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.07053) டிச.5 முதல் ஜன.9-ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும். ஹைதராபாத்தில் திங்கள்கிழமை தோறும் மாலை 3.50-க்கு புறப்படும் இந்த ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக வண்டி எண்.07054 டிச.7 முதல் ஜன.11-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படும். கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30-க்கு புறப்படும் இந்த ரயில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

இந்த ரயில் தமிழகத்தின் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம்
சபரிமலைக்குச் செல்லும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக அறநிலையத் துறை சாா்பில் தமிழக எல்லையான களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்கள் பூஜை பொருள்கள் உள்ளிட்ட எந்தப் பொருள்களையும் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு செல்லக்கூடாது, பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீா் எடுத்துச் செல்லுதல் கூடாது, பம்பை நதியின் புனித தன்மையை கருத்தில் கொண்டு ஷாம்பு, ஆயில் உள்ளிட்டவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், எளிதில் தீப்பிடிக்க கூடிய எரிவாயு உருளைகள் வாகனங்களில் ஏற்றிச்செல்லுதல் கூடாது உள்ளிட்ட பலவேறு விதிமுறைகள் குறித்த விளம்பர பலகையும் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மையம் 2023 ஜனவரி 20 ஆம் தேதிவரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள்

சபரிமலை சீசனை முன்னிட்டு பெல்காம் - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சீசனை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கா்நாடக மாநிலம், பெல்காம் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, பெல்காமில் இருந்து நவம்பா் 20ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:07357) மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து நவம்பா் 21 ஆம் தேதி மாலை 5.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:07358) மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும்.

வருகிற டிசம்பா் 4ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 15ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்( எண்: 07361) மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

டிசம்பா் 5ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 16ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07362) மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும்.

ஹூப்ளி - கொல்லம் சிறப்பு ரயில்:

கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து நவம்பா் 27ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 0735) மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து நவம்பா் 28ஆம் தேதி மாலை 5.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:07360) மறுநாள் இரவு 8 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

இந்த ரயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூா், திருவல்லா, செங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா்,திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com