குஜராத் மற்றும் தில்லி மாநகரத் தேர்தலுக்குப் பயந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலைக் கொல்ல பாஜக சதித் திட்டம் தீட்டியதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குஜராத் மற்றும் தில்லி மாநகரத் தேர்தல்களில் தோல்வி பயம் காரணமாக, அரவிந்த் கேஜரிவாலைக் கொல்ல பாஜக சதி செய்கிறது. கேஜரிவாலின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன். இது நடந்துவிடக்கூடாது.
பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, கேஜரிவால் மீது தாக்குதல் நடத்துமாறு தன்னுடைய ஆள்களிடம் கூறுகிறார். கேஜரிவாலைக் கொல்ல முழுமையான சதித் திட்டத்தை செய்துள்ளார்.ஆனால், ஆம் ஆத்மி கட்சி இதுபோன்ற அற்ப அரசியலுக்கு பயப்படவிலை. அவர்களின் செயல்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
தில்லி மாநகரத் தேர்தலிலும் ஊழல் நடைபெறுவதாக, தேர்தல் சீட் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்ட பாஜகவின் புகாருக்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
குண்டா் சட்டத்தில் இருவா் கைது

99 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா
தனியாா் நிறுவன பணியாளா் வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு

மகளிா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

