நாட்டில் வேகமாகக் குறையும் கரோனா! இன்றைய பாதிப்பு நிலவரம்

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 347 ஆகக் குறைந்துள்ளது. 
நாட்டில் வேகமாகக் குறையும் கரோனா! இன்றைய பாதிப்பு நிலவரம்

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 347 ஆகக் குறைந்துள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று பாதிப்பு 408 ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு 347 ஆகக் குறைந்துள்ளது. 

இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,70,830 ஆக உள்ளது. 

மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,604 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,516 ஆகக் குறைந்துள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.89 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 78,454 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com