ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வார இறுதி! சபரிமலை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 5.50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
சபர்மலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
Updated On :6 பிப்ரவரி 2024, 12:50 pm

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 5.50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த 16-ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது வார இறுதி என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சபரிமலை கோயில் திறக்கப்பட்ட முதல் நாளான நவம்பர் 17ஆம் தேதி 47,947 பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். முதல் 6 நாள்களில் 2,61,874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தற்போதுவரை சபரிமலையில்  5.50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், நேரடியாக வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.