மகப்பேறு அறுவைச்சிகிச்சையில் வயிற்றுக்குள் மறந்துவிடப்பட்ட துண்டு

பெண்ணின் வயிற்றுக்குள் அறுவைச்சிகிச்சைக்குப் பயன்படும் துண்டு மறந்துவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகப்பேறு அறுவைச்சிகிச்சையில் வயிற்றுக்குள் மறந்துவிடப்பட்ட துண்டு
மகப்பேறு அறுவைச்சிகிச்சையில் வயிற்றுக்குள் மறந்துவிடப்பட்ட துண்டு
Published on
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மகப்பேறு அறுவைச்சிகிச்சையின்போது பெண்ணின் வயிற்றுக்குள் அறுவைச்சிகிச்சைக்குப் பயன்படும் துண்டு மறந்துவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவ கவனக்குறைவு என்பது உயிர்பலி வரை செல்லும் என்பதால் மிகவும் அபாயத்துக்குரியது. தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறுவைசிகிச்சையின்போது போடப்பட்ட இறுக்கமான பேண்டேஜ் அகற்றப்படாததால், அவர் உயிரே பறிபோனது.

இந்த  நிலையில் 31 வயது பெண்ணின் அடிவயற்றுக்குள் மறந்துவிடப்பட்ட அறுவைகிசிச்சை துண்டு காரணமாக அவருக்கு தாங்க முடியாத துயரங்கள் ஏற்பட்டு, மூன்று மோசமான அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு, அந்த துண்டு வயிற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

மனத் துயரத்தோடு, கொடுந்துயரமான அறுவைசிகிச்சைகளையும் அனுபவித்த பெண்ணுக்கு, அந்த தனியார் மருத்துவமனை 20 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஏலஹென்கா பகுதியைச் சேர்ந்த பெண். ஆனால் அதன்பிறகு அவருக்கு தீரான வயிற்றுவலி ஏற்பட்டது. அறுவைசிகிச்சை செய்தால் வலி ஏற்படுவது வழக்கம்தான் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பிறகு பலக்கட்ட மருத்துவமனைப் பயணத்துக்குப் பிறகுதான் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது அடிவயிற்றுப் பகுதி ஸ்கேனில் தெரிய வரவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. அதற்கும் அந்த தனியார் மருத்துவமனை இரண்டு அறுவைசிகிச்சைகளை செய்திருக்கிறது. ஆனாலும் பிரச்னை சரியாகவில்லை.

பிறகு ஆயுர்வேத மருத்துவரிடம் சென்றபோது எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில், அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தும் துண்டு அந்த பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்றாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த துண்டு உடலுக்குள் இருந்துகொண்டு பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்தியது. அதன்பிறகும் சில உடல்நலப் பிரச்னைகளுக்காக அவருக்கு நான்காவது முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட, பெண் சந்தித்த அனைத்துத் துயரங்களுக்கும், மகப்பேற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவின் கவனக்குறைவே காரணம் என்றும், மருத்துவமனை தரப்பில் பெண்ணுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com