பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தாராவி குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்: அதானி குழுமம் தேர்வு

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர்பெற்ற மும்பையில் அமைந்திருக்கும் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்தும் திட்டத்துக்கான ஒப்பந்தத்துக்கு அதானி குழுமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தாராவி குடிசைப் பகுதி

Published On :

மும்பை: ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர்பெற்ற மும்பையில் அமைந்திருக்கும் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்தும் திட்டத்துக்கான ஒப்பந்தத்துக்கு அதானி குழுமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

259 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருந்த நிலையில், உச்சபட்ச தொகையுடன் அதானி குழுமும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மேம்படுத்த ரூ.5,069 கோடி என்று நிர்ணயித்திருந்த அதானி குழுமம், இதே ஒப்பந்தத்தில் ஈடுபட்ட டிஎல்எஃப் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, வெற்றி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ரூ.2,025 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். பிறகு அது பரிசீலனை செய்து இறுதி அனுமதி வழங்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் இரண்டொரு வாரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி வழங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை நிறைவு செய்ய 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு தற்போது 6.5 லட்சம் குடிசைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த ஒப்பந்தப்புள்ளியில் 3 நிறுவனங்கள் பங்கேற்றன. ஒப்பந்தப்புள்ளியில் வெற்றி பெற்ற நிறுவனம்தான், தாராவி பகுதியில் உள்ள மக்களின் மறுவாழ்வுக்கும், கட்மைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.