பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இந்தியாவுக்கு வந்த சிவிங்கிப் புலி: நல்ல செய்தி காத்திருக்கிறதா?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 7 சிவிங்கிப் புலிகளில் ஒன்றான ஆஷா விரைவில் நல்ல செய்தி சொல்லப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :1 அக்டோபர் 2022, 12:19 pm

DIN

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 7 சிவிங்கிப் புலிகளில் ஒன்றான ஆஷா விரைவில் நல்ல செய்தி சொல்லப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 சிவிங்கிப் புலிகள் விரைவில் எட்டு ஆக மாறும் வாய்ப்பு உள்ளது. ஆஷா என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒரு சிவிங்கிப் புலி கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகளை காட்டுவதாகவும், அக்டோபர் மாத இறுதியில் இது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்ரிக்க நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட் 7 சிவிங்கிப் புலிகளும் மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய வனவிலங்குகள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

7 சிவிங்கிப் புலிகளில் 4 பெண் சிவிங்கிப் புலிகள். அதில் ஒன்றுதான் ஆஷா.  இது குறித்து வனவிலங்குகள் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ஆஷா கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆனால் அதனை உறுதி செய்துகொள்ள அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.

இது உறுதி செய்யப்பட்டால், இந்தியாவில் முதல் சிவிங்கிப் புலியை ஈனப்போவது ஆஷாவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.