ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு!

இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 49 காசுகள் சரிந்து ரூ.81 ஆக வர்த்தகமானது.

News image
Updated On :3 அக்டோபர் 2022, 12:36 pm

DIN

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 49 காசுகள் சரிந்து ரூ.81-ஆக வர்த்தகமானது. இது தவிர தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறி வருவதாலும், தங்களிடமுள்ள இருப்பை விற்று வருவதாலும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்றைய ரூபாயின் மதிப்பு 81.65 ஆக பலவீனமாவதை தொடர்ந்து, வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிராக 81.98 ஆக சரிந்தது, இறுதியாக அதன் முந்தைய நாள் முடிவை விட 49 பைசா குறைந்து ரூ.81.89ல் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 638.11 புள்ளிகள் சரிந்து 56,788.81 ஆக முடிந்தது, அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 207 புள்ளிகள் சரிந்து 16,887.35 ஆக இருந்தது.

உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 4.12 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 88.65 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தக சந்தையில் சுமார் ரூ.1,565.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

இதே போல, கடந்த இரண்டு மாதங்களாக அந்நிய முதலீட்டாளா்கள் அதிக அளவு முதலீடு செய்துள்ள நிலையில், செப்டம்பரில் மீண்டும் அவர்கள் விற்பனையாளர்களாக மாறியதால், இதுவரை பங்குச் சந்தையில் இருந்து சுமார் ரூ.7,600 கோடியை எடுத்த சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.